கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக முழக்கங்கள்


  கர்நாடக மாநில சட்டப்பேரவையில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல், இன்று அவை நடைபெற்று வந்த போது, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் 5 பேர் திடீரென அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
   மேலும் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பாஸ்கர் ராவின் நியமனத்தை எதிர்த்தும் அவர்கள் கேள்விகளை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற அவை காவலர்கள் அவர்களை வெளியேற்ற முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வெளியேற்றப்பட்ட 5 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனையால் அவை நடவடிக்கைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.
                                                         -ஹாட் ஸ்பாட் நரேஷ்