சுவாதியின் லேப்டாப்பில் இருந்து நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ரகசியங்கள்

thagavalthalam சுவாதிசென்னை: சாப்ட்வேர் பொறியாளர் சுவாதியின் படுகொலையில் இன்னமும் மர்மங்கள் ஓயவில்லை. சுவாதியின் லேப்டாப்பில் இருந்து நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ரகசியங்கள் கசிந்ததாகவும் அது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது 'ஒருதலைக் காதல்' கொலை என கூறப்பட்டது. அப்போதே இது காதல் ஜிகாத் என்ற வேறு கோணத்துக்கும் போனது.
பின்னர் ராம்குமார் என்ற இளைஞரே குற்றவாளி என பிரகடனம் செய்தது போலீஸ். அப்படி ராம்குமாரை குற்றவாளி என கூறிக் கொண்டே இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது போலீஸ்.
தற்போதும் கூட சுவாதியை ராம்குமார் என்ற இளைஞர் அவ்வளவு கோரமாக வெட்டியிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பிரான்ஸ் தமிழச்சியும் தம் பங்குக்கு சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் புதிய திருப்பமாக சுவாதியின் லேப்டாப்பில் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் இருந்ததாகவும் இந்த ரகசியங்கள் கசியவிடப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த பாதுகாப்பு ரகசியங்கள் தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது
Source: tamil.oneindia.com