ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில் முறைகேடு என புகார்

             ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெளிப்படையான பணி நியமன கலந்தாய்வு நடைபெற வேண்டுமென ஆசிரியர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பணி நியமன கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
கலந்தாய்வு துவங்க இருந்த 2 மணியளவில், சென்னையில் காலிப்பணியிடங்களே இல்லை என்றும், இருப்பிடச்சான்றில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும் என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்தாய்வுக்கு வந்தவர்களுடன் ஆசிரியர் கூட்டமைப்பினர் இணைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
-பூமித்ரா சுரேஷ்