அமைச்சர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் முதல்வருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை


முதல்வர் ஜெயலலிதாவை வார்டுக்கே சென்று பார்த்தேன் “அமைச்சர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும்”

ஆளுநர் வித்யாசாகர் ராவ் சார்பில் ராஜ்பவன் அறிக்கை

      உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை இன்று மாலை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார்.
     முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22-ந் தேதி வியாழக்கிழமை இரவு கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்குக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை:
     தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை மாலை 6.45 மணியளவில் நேரில் சென்று பார்த்தார்.
   ஆளுநரிடம் மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தார்.
   முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டுக்கே சென்று பார்த்தார் ஆளுநர். முதல்வர் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கே தன்னை அழைத்துச் சென்றதற்காக டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விளக்கியதற்காகவும் டாக்டர்களுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
    முதல்வர் வேகமாக தேறி வருவதை அறிந்து ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். முதல்வருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையையும், அக்கறையையும் அளிக்கும் டாக்டர்களுக்கு ஆளுநர் பாராட்டும் தெரிவித்தார்.
முதல்வர் விரைவில் நலமடைய வேண்டி பழக் கூடை ஒன்றையும் ஆளுநர் அளித்தார்.
    ஆளுநரின் விஜயத்தின்போது லோக்சபா துணைத் தலவர் தம்பித்துரை, நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சென்றிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:oneindia

தொடரும் ரியல் எஸ்டேட் குற்றங்கள்

    தொடர்ந்து வரும் நில மோசடி குற்றங்கள்.....!  நில அபகரிப்பு சட்டம்  நடைமுறையில் இருந்தும் மோசடி  மன்னர்களால் போலி பத்திரப்பதிவு, போலி கையெழுத்து , போலி மருத்துவ சான்று என  நடந்து கொண்டுதான் இருக்கிறது.

   வேலூர் மாவட்டம் ஓச்சேரி அருகில் உள்ள களத்தூர் கிராமத்தில் வசிக்கும் நில தரகர்கள்  வசந்த் , சிவகுமார்  ,குட்டி என்கின்ற சுப்பிரமணி எனும் இம்மூவரால் பத்திரப்பதிவு மோசடி நடந்தேறியுள்ளது .

     பத்திரப்பதிவு துறையில் விஜிலன்ஸ் என்று ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுகிறது ? . இவர்கள் அதே ஊரில் பலரை ஏமாற்றியுள்ளனர், யாரும் புகார் தர முன்வருவதில்லை  காரணம், ஊர் கட்டுப்பாடு ,  கட்டப்பஞ்சாயத்து.

    களத்தூரில் பூர்வீகமாக வசித்து தற்போது காஞ்சிபுரம் நகரத்தில் வசிக்கும் கைலாசம் என்கின்ற முதியவரை நில மோசடி செய்துள்ளனர் . இம்மூவரில்  வசந்த் மற்றும் குட்டி  இருவரும் சிவகுமார் மீது பவர் அதிகாரம் செய்துள்ளனர். கைலாசத்திடம் நிலத்தை விற்றுத்தருவதாக சொல்லி , 31.3.2016 அன்று 21 சென்ட்டு  நிலத்திற்கு பவர் பெற்று 6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் அதிகார பத்திரப்பதிவு செய்து ஏமாற்றியுள்ளனர். 

  பிறகு காஞ்சிபுரத்திலுள்ள நிலத்தரகர் மூலம் சென்னையில் உள்ள ஒரு பெரும் புள்ளிக்கு  20.7.2016அன்று 4 ஏக்கர் 77 சென்ட்டு நிலத்தை  நில உரிமையாளருக்கு தெரிவிக்காமல் கிரயப்பத்திரப்பதிவு செய்து விற்றுள்ளனர் . நிலம் வாங்கியவர்க்கும், தரகர்களும் இடையே நில அளவிலும் பணம் பரிமாற்றத்திலும் பிரச்சனை வர இது நில உரிமையாளருக்கும் அவருடைய மகனுக்கும் தெரியவர நிலம்  கிரய ரத்து செய்துள்ளனர் . 

       இதில் 21 சென்ட்டு நிலத்திற்கு பதிலாக  6 ஏக்கர் 56 சென்ட்டு பவர் மோசடி, மருத்துவ  சான்றில் கையழுத்து மோசடி, ஆளில்லாமல்  ( Life Certificate) மருத்துவ  சான்று பெற்றது , இரண்டு  விலாசம் கொடுத்திருப்பது , வாரிசு சான்றில்  திருத்தங்கள் என ரியல் எஸ்டேட் குற்றங்கள் நடந்துள்ளது .

     இந்த நில மோசடி செய்தியை நமக்கு கொடுத்தவர்கள் புகார் கொடுக்கவும் சட்டத்தின் முன் வரவும் தயக்கம் காட்டுகின்றனர் .ஆனால் சட்ட நடவடிக்கை வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இந்த நில மோசடியின் பின்னணியில் இருக்கும் கும்பல் யார் ? பெரும் புள்ளிகள் யராவது இருக்கிறார்களா ? என்று காவல்துறை உடனே கண்டுபிடிக்க வேண்டும் . அரசு பதிவுத்துறை விஜிலன்ஸ் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?அல்லது  ரியல் எஸ்டேட் குற்றங்கள்  தொடருமா?என்று பொறுத்திருந்து அடுத்து
வரும்  விசாரணையில்  பார்க்கலாம் .

ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் கைதுகோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த தீரன் சின்னமலை பேரவை என்ற ஜாதி அமைப்பின் தலைவரான யுவராஜை மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று மீண்டும் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ், கடந்த ஆண்டு அக்டோபரில் நாமக்கல் சிபிசிஐடி போலீசில் சரண் அடைந்தார். இதனையடுத்து ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் மனுத்தாக்கல் செய்ததன்பேரில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த யுவராஜ் மீண்டும் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் யுவராஜை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். யுவராஜை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: tamil.oneindia.com

சுவாதியின் லேப்டாப்பில் இருந்து நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ரகசியங்கள்

thagavalthalam சுவாதிசென்னை: சாப்ட்வேர் பொறியாளர் சுவாதியின் படுகொலையில் இன்னமும் மர்மங்கள் ஓயவில்லை. சுவாதியின் லேப்டாப்பில் இருந்து நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு ரகசியங்கள் கசிந்ததாகவும் அது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது 'ஒருதலைக் காதல்' கொலை என கூறப்பட்டது. அப்போதே இது காதல் ஜிகாத் என்ற வேறு கோணத்துக்கும் போனது.
பின்னர் ராம்குமார் என்ற இளைஞரே குற்றவாளி என பிரகடனம் செய்தது போலீஸ். அப்படி ராம்குமாரை குற்றவாளி என கூறிக் கொண்டே இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது போலீஸ்.
தற்போதும் கூட சுவாதியை ராம்குமார் என்ற இளைஞர் அவ்வளவு கோரமாக வெட்டியிருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பிரான்ஸ் தமிழச்சியும் தம் பங்குக்கு சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் புதிய திருப்பமாக சுவாதியின் லேப்டாப்பில் நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் இருந்ததாகவும் இந்த ரகசியங்கள் கசியவிடப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இந்த பாதுகாப்பு ரகசியங்கள் தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது
Source: tamil.oneindia.com

ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ பயணிக்கும் எலக்ட்ரிக் பஸ்


thagavalthalam எலக்ட்ரிக் பஸ்

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் சூப்பர் கார் வரை இப்போது பேட்டரி மின்சாரத்தில் இயங்கும் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மின்சார வாகனங்களின் பயண தூரம் மிக குறைவாக இருப்பதுதான் வாகனத் துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்தநிலையில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 966 கிமீ தூரம் பயணிக்கும் பஸ் மாடல் ஒன்று அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார பஸ் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.
thagavalthalam எலக்ட்ரிக் பஸ்
அமெரிக்காவை சேர்ந்த புரொடெர்ரா என்ற நிறுவனம்தான் இந்த பஸ்சை அறிமுகம் செய்திருக்கிறது. புரொடெர்ரா கேட்டலிஸ்ட் FC மற்றும் XR ஆகிய வரிசையில் ஏற்கனவே பொது போக்குவரத்துக்கான எலக்ட்ரிக் பஸ்களை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு புரொடெர்ரா பஸ்களின் விற்பனை 220 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பொது போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில் E2 என்ற வரிசையில் புதிய பஸ் மாடலை புரொடெர்ரா அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த பஸ்சில் 440 முதல் 660 kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை ஓட்டத்தின்போது 966 கிமீ தூரம் பயணித்து சாதனை படைத்துள்ளதாம். அதேநேரத்தில், சாதாரண சூழலில் பயணிக்கும்போது பாரத்திற்கு தகுந்தவாறு 312 கிமீ தூரம் முதல் 563 கிமீ தூரம் வரை பயணிக்குமாம்.
42 அடி நீளம் கொண்ட புரொடெர்ரா E2 பஸ்சில் 40 பேர் பயணிக்கும் இருக்கை வசதி கொண்டது. மேலும், எடை குறைப்பிற்காக கார்பன் ஃபைபர் கலவை கொண்ட உடற்கூடு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
thagavalthalam எலக்ட்ரிக் பஸ்
புரொடெர்ரா கேட்டலிஸ்ட் FC மற்றும் XR ஆகிய பஸ் மாடல்கள் நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே சிறந்தது. ஆனால், இந்த புதிய E2 பஸ்களை நடுத்தர மற்றும் நீண்ட தூர வழித்தடங்களிலும் இயக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பஸ்சிற்கு பொது போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தெர்கு கரோலினா பகுதியில் உள்ள ஆலையின் உற்பத்தி திறனை இருமடங்காக உயர்த்த புரொடெர்ரா திட்டமிட்டுள்ளது. இதுவரை விற்பனை செய்யப்பட்ட பஸ்கள் 4.2 லட்சம் கிமீ தூரம் பயணித்துள்ளனவாம்.
இதன்மூலமாக, 5.40 லட்சம் கேலன் டீசல் மிச்சப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று, 10 மில்லியன் பவுண்ட் கார்பன் புகை மாசு தவிர்க்கப்பட்டிருக்கிறதாம். புரொடெர்ரா E2 வரிசை மின்சார பஸ் மாடல்கள் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு இணையான செயல்திறனையும், பயண தூரத்தையும் வழங்கும்.
எவ்வித சமரசமும் இருக்காது. அமெரிக்காவின் சாதாரண சாலைகளில் கூட இந்த பஸ்கள் ஓட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்,' என்று புரொடெர்ரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரியான் பாப்பிள் தெரிவித்துள்ளார்.
thagavalthalam எலக்ட்ரிக் பஸ்
இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளும், திட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற பஸ் மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும் கூட.
                                                                                *****பசுமை நாயகன்
Source: drivespark

பேட்டரி இல்லாமல் ஒரு மடிக்கணினி

Thagavalthalamசற்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் லேப்டாப்பில் பேட்டரியின்றி அதில் வேலை செய்ய முடியும், திரைப்படம் பார்க்க முடியும், கேம்கள் விளையாட முடியும், இசை கேட்க முடியும் என்றால் எப்படி இருக்கும்.?
அதெல்லாம் மிக சாத்தியமற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றே அது ஒருபக்கம் இருக்கட்டும் முடியாத காரியமென்று ஏதேனும் உண்டா என்ன..? - கிடையாது.!
அப்படியாக, நீங்கள் ஒரு எளிய தந்திரம் மூலம் பேட்டரி இன்றி உங்கள் லேப்டாப் இயக்க முடியும். நிஜமாகத்தான்..!
பொதுவாக மடிக்கணினிகள் ஒரு விண்டோஸ் அல்லது மேக்புக் எதுவாக இருப்பினும் பேட்டரி மற்றும் ஏ/சி (ஆல்டர்நேட்டிவ் கரண்ட்) அடாப்ட்டர் ஆகிய இரண்டுமே அதன் ஆற்றல் மூலாதாரமாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுருக்கும்.
ஆக ஒரு மடிக்கணினியானது அதன் பேட்டரி நீக்கப்பட்ட பின்பும் அல்லது பேட்டரி தீர்ந்த பின்னும் கூட அதனால் திறம்பட வேலை செய்ய முடியும். எனவே, நீங்கள் உங்கள் லேப்டாப்பை ஏ/சி பவர் உடன் இணைத்துக்கொள்ள முடியும்.
இதை நடைமுறைப்படுத்தி பார்ப்பதற்கு முன்பு நீங்கள் லேப்டாப் உடன் கிடைக்கப்பெற்ற அசல் பவர் அடாப்டரை தான் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஏனெனில் மடிக்கணினியோடு கிடைக்கப் பெறாத அடாப்டர்களின் திறன்களில் வேறுபாடுகள் இருக்கும் அது உங்கள் மதர்போர்டை மிகத்தீவிரமாக சேதப்படுத்தி விடும்.
பேட்டரி இல்லாமல் ஒரு மடிக்கணினி இயக்குவது மிகவும் கண்கவர் தந்திரங்களில் ஒன்றாக இருக்கலாம் ஆனால், அதை நிகழ்த்தும் முன்பு சில விடயங்களை நீங்கள் மனதிற்கொள்ள வேண்டும்.
நீங்கள் அதிதீவிர மின்சார சுமைகள் கொண்ட பகுதிகளில் இருப்பின் எப்போதும் ஒரு யுபிஎஸ் பயன்படுத்துவது நல்லது. சக்தி செயலிழப்பு ஏற்பட்டால் கூட உங்கள் வேலை பாதிக்கப்படமாட்டாது.
உங்கள் மடிக்கணினியின் கோர்ட்'தனை எப்போதும் நீக்க கூடாது, மீறினால் அது லேப்டாப் கூறுகளை பாதிக்கும் உடன் உங்கள் லேப்டாப்பை கட்டாயமாக ஷட் டவுன் செய்யும்.
லேப்டாப் ப்ளக்-இன் செய்யப்பட்டிருக்கும் போது பேட்டரி தொடர்புகள் எதையும் தொட கூடாது. மீறினால் பயனாளிகளுக்கு ஆபத்துகள் நேரிடலாம்.
ஏ/சி அடாப்டரை பயன்படுத்துவதை விட ஒரு பேட்டரியை பயன்படுத்துவதே எப்போதுமே நல்லது.


குறைந்து கொண்டே போகும் விவசாயம்

சுற்றுச்சூழல் பசுமை நாயகன

சுற்றுச்சூழல் ரதயாத்திரை


பசுமை நாயகன் Pasumai Nayagan www.thagavalthalam.com
இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடியை தாண்டி சென்று கொண்டே இருக்கிறது. அத்தனைப் பேருக்கும் உணவு அளிக்க வேண்டிய விவசாயத்துறை குறைந்து கொண்டே போகிறது. விவசாயிகள் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். முன்பெல்லாம் நமது முன்னோர்கள் செலவில்லாமல் இயற்கை விவசாயம் செய்து வந்தனர். பசுமை புரட்சி விவசாயத்தை பசுமை ஒரு பெரும் மூலதனம் போட்டு செய்ய வேண்டிய தொழிலாக இருந்து வருகிறது. விவசாயத்தை விட்டுவிட்டு கிராமமக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். இப்படியே போனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானியங்கள் கிடைக்காது பஞ்சம் ஏற்படும் அபாயம்முள்ளது. அரசு விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கவேண்டும். 
                    தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பு சுமார் 130 லட்சம் ஹெக்டேர். இதில் நீர்பாசனவசதி இருப்பதாக கருதப்படுகிற நிலம் சுமார் 33 லட்சம் ஹெக்டேர்தான். நீர்பாசன வசதியற்ற, வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலப்பரப்பு சுமார் 37 லட்சம் ஹெக்டேர்ராகும் ! அதாவது நாம் மொத்த நிலப்பரப்பான 130 லட்சம் ஹெக்டேரில் சுமார் 70 லட்சம் ஹெக்டேரைதான் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். இது மேலும் நகரமயம் என்று குறைந்து கொண்டே போகிறது...! 2020-ல் பஞ்சம் ஏற்படுவது உறுதி...!.........?
                                                                                                        -பசுமை நாயகன்.