13 வகையான கலவை சாதங்கள், நான்கு வகையான முட்டை மசாலாக்களை சத்துணவுத் திட்டம்

     சத்துணவு திட்டத்தில் பல்வேறு வகையான உணவுகளை வழங்கும் வகையில் தமிழக அரசு பெரும் மாற்றத்தை செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சத்துணவுக்‌கூடம் இது. இங்கு, 13 வகையான கலவை சாதங்கள், நான்கு வகையான முட்டை மசாலாக்களை சத்துணவு மையங்களிலும், அங்கன்வாடிகளிலும், வழங்கும் திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் பா வளர்மதி துவக்கி வைத்தார். தமிழகத்தின் 37 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
     தேசிய அளவில் கவனம் பெற்ற திட்டம்: முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம், 1982-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் சத்துணவுத் திட்டமாக மாற்றம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளது. ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தத் திட்டம் தேசிய அளவில் தற்போது கவனம் பெற்றுள்ளது.
    மாணவர் சேர்க்கை அதிகரிக்குமா? அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறைந்து வரும் நிலையில், வறுமை காரணமாக மாணவர்கள் படிப்பை கைவிடுவதை தடுப்பதில் இந்த சத்துணவுத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றே கூறலாம்.