மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த இறுதி முடிவினை எடுப்பதற்காக பிரதமர்
மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று ஆலோசனை
நடத்துகின்றனர். புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்ப்பது குறித்தும்,
செயல்படாத மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களை நீக்குவது
குறித்தும் இதில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை கவனித்து வருபவர்களின் பணிச்சுமையை
குறைக்கும் நோக்கிலும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின்
பரிந்துரைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இதனால் இளம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்தவர்களாவே இருப்பார்கள். மத்திய அமைச்சர் அகதா சங்மாவிற்குப் பதிலாக
தேசியவாத காங்கிரஸ் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள தாரிக் அன்வர்
மட்டுமே காங்கிரஸ் அல்லாத புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
திமுகவை சேர்ந்தவர்களுக்கு புதிய இலாக்காக்கள் வேண்டாம் என அக்கட்சி
தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக மறுத்துவிட்ட நிலையில், மத்திய இணை அமைச்சர்
நாராயணசாமி நேற்று அவரை சந்தித்துப் பேசினார். புதிய அமைச்சர்களுக்கான
பதவி ஏற்பு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-இணைய செய்தியாளர் - s.குருஜி
-இணைய செய்தியாளர் - s.குருஜி