சொத்துக் குவிப்பு வழக்கு

       ருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலாவின் வாக்குமூலத்தை அடுத்த மாதம் 20 ம் தேதி பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் ஆவணங்களை படித்துப் பார்க்க சசிகலா உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் கடந்த 18ம் தேதி அனுமதி அளித்தது.  இதனையேற்று, ஆவணங்களை பார்க்க நவம்பர் 17 ம் தேதி வரை  அனுமதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சோமராஜூ இன்று அனுமதி வழங்கினார்.
சசிகலா தவிர, வி.சுதாகரன், இளவரசி ஆகியோரு்ம ஆவணங்களை படித்துப் பார்க்க அனுமதி வழங்கி நீதிபதி சோமராஜூ உத்தரவிட்டார்.