தமிழகத்தில் காவலர் பற்றாக்குறையை சமாளிக்க சிறப்பு இளைஞர் காவல் படை முதலமைச்சர் அறிவிப்பு

     மிழகத்தில் காவலர் பற்றாக்குறையை சமாளிக்க புதிய இளைஞர் காவல் படை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக, சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய அவர், முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் 10 ஆயிரம் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படும் இவர்கள், ஓராண்டை நிறைவு செய்த பின்னர், காவல்துறையில் இணைக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பு காவல் படையில் சேர்க்கப்படும் இளைஞர்கள் இரவு ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
-சத்திஷ் K.K.K.nagar