இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடைபெறவுள்ள ஐநா விசாரணையில்
பாட்டாளி மக்கள் கட்சி கலந்து கொள்ளும் என அதன் நிறுவனர் ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெனிவாவில் நாளை
மறுநாள் நடைபெறும் விசாரணையில் பசுமைத் தாயகம் சார்பில் பாமக தலைவர் ஜி.கே.
மணி பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளார்.
அப்போது, இலங்கை மீது ஏன் போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும்
என்பதற்கான வாதங்களை முன் வைப்பார் என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல்,
1-ந் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் ஜி.கே. மணியுடன், பசுமைத் தாயகம்
அமைப்பின் செயலாளர் இர.
அருளும் கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, இங்கிலந்து
நாடாளுமன்ற அரங்கில் நடக்கவிருக்கும் சர்வதேச தமிழ் மாநாட்டிலும் இருவரும்
பங்கேற்பார்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.