நதிநீர் பங்கீடு பற்றி ஆலோசனை : முதலமைச்சர், அதிகாரிகள் பங்கேற்பு

         நதீநீர் பங்கீடு விவகாரம் குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, காவிரி நீர் பிரச்னை, பரம்பிக்குளம் ஆழியாறு நதிநீர்பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், மூத்த அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, தமிழகத்தில் நிலவும் மின்நிலைமை மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெறுவது குறித்து அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி