டல் பருமனடைதலால் பெண்களின் புத்திக்கூர்மைக்கும் மூளையின் 

தொழிற்பாட்டிற்கும் தீங்கு என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


 

  •             
  •             உடல் பருமனை வைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் அறிவாற்றலைக் கணிக்கலாம். வயது முதிர்ந்த பெண்களின் உடல் நிறை கூடிக்கொண்டு செல்லச் செல்ல அவர்களது ஞாபகசக்தியைப் பேணும் தன்மையும் புத்திகூர்மையும் புலன் உணர்வு தன்மையும் குறைந்து போகின்றது என்று அமெரிக்காவில் ஒரு புதிய ஆய்வில் வெளியாகி உள்ளது. 
  • தோற்றத்தின் அடிப்படையில் உடல் பருமன் கணக்கீடு இடைப்பகுதிக்கு கீழே எடை அதிகமாயின் பேரி உருவம் (Pear shape) எனவும், இடைப்பகுதிக்கு மேலே அதிகமாயின் ஆப்பிள் வடிவம் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. 

  • பேரி வடிவ உடல் பருமன் உடையோருக்கு ஆப்பிள் வடிவத்தோரை விட மூளையின் செயல்திறன் குறைவடைந்து செல்வதை அவதானித்தார்கள். பழமையான தீங்குகளான புற்றுநோய், நீரிழிவு நோய், இதயநோய், குருதிக்குழாய் நோய் என்பவற்றுடன் மூளையின் செயற்பாடும் குறைவதை இடையின் கீழே கொழுப்புப் படிந்து, எடை அதிகமாகி உள்ள பேரி வடிவ பெண்களில் காணக்கூடியதாக இருந்தது.


  • ஆராய்வில் 65க்கும் 79க்கும் இடைப்பட்ட 8745 எண்ணிக்கையிலான பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களிடம் மூளையின் செயற்பாட்டை அவதானிக்க சில அறிவாற்றற் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொருவரதும் உடற் நிறைச் குறியீட்டெண் (உநிகு - BMI) கணிப்பிடப்பட்டன. மூன்றில் இரண்டு பகுதிக்கு மேலானவர்களுக்கு அதிக எடையாகவோ அல்லது உடல் பருமனாகியோ காணப்பட்டது. உநிகு ஒரு புள்ளியால் அதிகரிக்க புத்திக்கூர்மை ஒரு புள்ளியால் குறைவடைந்ததை அவதானித்தார்கள். இவர்களுள் பேரி வடிவ பெண்கள் மேலும் மோசமாக புத்திக்கூர்மை இழப்பதையும் அவதானித்தார்கள்.


  • இவை உடலில் கொழுப்புப் படியும் இடத்திற்கேற்ப உடல் தொழிற்பாடு மாறுபடுவதைக் காட்டினாலும், இதற்கும் மூளையின் செயற்பாட்டுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அறிய மேலும் ஆராய்வுகள் தேவை எனக்கூறப்படுகிறது.






*****************************************************************************************

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களின் அலட்சியத்தால், ஏராளமான மாணவிகள் மதிய உணவின்றி பட்டினியால் வாடினர்.

கிருஷ்ணகிரி-பெங்களூர் சாலையில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. 3 ஆயிரத்து 240 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் 840 மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் போதும், மதிய உணவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு நேற்று சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. வழக்கம்போல் மதியம் சத்துணவு வழங்கப்படும் என மாணவிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று மதிய உணவு வழங்கப்படும் சத்துணவு அறை பூட்டப்பட்டிருந்த நிலையில், சத்துணவு அமைப்பாளரை சிலர் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அவர் தொலைபேசி தொடர்பில் வரவில்லை.இதுகுறித்து, மாணவிகள் அனைவரும் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, உள்ளூர் மாணவிகள் சிலர் தமது வீட்டில் உணவு உண்டுள்ளனர். எனினும், வெளியூர் மாணவிகள் அனைவரும் நேற்று மதிய உணவு சாப்பிடாமல் பட்டினியால் வாடியுள்ளனர்.
இதுகுறித்து, தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சில சனிக்கிழமைகளில் சத்துணவு வழங்கப்படும் என்றும், பெரும்பாலான சனிக்கிழமைகளில் வழங்கப்படுவது இல்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, சத்துணவு வழங்கும் அளவுக்கு போதிய அரிசி இல்லை என்றும் நிர்வாகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், சத்துணவு வழங்காத நாட்கள் குறித்து மாணவிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் மாணவிகள் பட்டினி கிடக்க நேரிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், அந்தப் பள்ளியின் சத்துணவு மையத்துக்கு, நேற்று மாலை உணவுக்கழகத்தில் இருந்து அரிசி மூட்டைகள் சேர்ந்தன.