முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 73 பில்லியன் டாலர்


 இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 6வது முறையாக முதல் இடத்தில் உள்ளார். உலக பணக்காரர்களின் பட்டியலை பிரபல பத்திரிக்கையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 73 பில்லியன் டாலர் ஆகும். இவரைத் தொடர்ந்து 67 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி 21.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புகளுடன் இந்தியாவில் முதல் இடத்தையும், உலக அளவில் 22வது இடத்திலும் உள்ளார். 16.5 பில்லியன் டாலர்களுடன் லஷ்மி மிட்டல் இந்தியாவில் 2வது இடத்தையும், உலக அளவில் 41 இடத்தையும் பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, ஆயிரத்து 426 பேர்களைக் கொண்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 55 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.