மேடை சரிந்ததில் சந்திரபாபுவுக்கு முதுகில் காயம்

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்ட கூட்டத்தின் மேடை திடீரென சரிந்து விழுந்ததில், அவருக்கு முதுகில்   காயம் ஏற்பட்டது. ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு, மஹபூப்நகர் மாவட்டம் கட்வாலில் நடந்த கூட்டத்தில் பேசினார்.
இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையி்ல் ஏராளமான தொண்டர்கள் ஏறினர். பேச்சை முடித்து சந்திரபாபு நாயுடு கிளம்ப இருந்த சமயத்தில் மேடை திடீரென சரிந்தது. உடனே, சந்திரபாபு நாயுடுவின் பாதுகாவலர்கள் அவரை காப்பாற்றினர்.
பின்னர் சிறிது  தூரம் நடந்து சென்ற நிலையில், தனக்கு முதுகு வலிப்பதாக அவர் கூறினார். இதையடுத்து, சந்திரபாபுவை பரிசோசித்த  மருத்துவர்கள், அவரது முதுகில்   காயம்  ஏற்பட்டுள்ளதாக கூறி, ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு  பாதயாத்திரையை நிறுத்தினார்.