புகுஷிமா அணு உலை விபத்து நிகழ்ந்து ஓராண்டு கடந்தபோதிலும் ஜப்பானிலுள்ள
மீன்களில் தற்போதும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
கென் புஸெலர் என்ற வேதியியல் விஞ்ஞானி நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும்
இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஃபுகுஷிமா அணு உலை அருகே கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களை
ஆய்வுசெய்தபோது அணுகதிர்வீச்சுத் தன்மை வாய்ந்த சீசியம் (caesium) அளவு,
நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை
உறுதிசெய்துள்ள விஞ்ஞானி புஸெலர், புகுஷிமா அணு உலையில் இருந்து தற்போதும்
கதிர்வீச்சு கசிய வாய்ப்பிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும் கடற்பாசி, மட்டி ஆகியவற்றிலும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதால்
கடலுக்கு அடியில் கதிர்வீச்சுப் பொருள் படிந்திருக்கலாம் என்றும் சந்தேகம்
எழுப்பியுள்ளார். இதனிடையே மீன்களில் பரவியிருக்கும் கதிர்வீச்சு இன்னும்
பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என வேதி விஞ்ஞானி புஸெலர் கவலை
தெரிவித்துள்ளார்.
-இணைய செய்தியாளர் - s.குருஜி