கரும்பு விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கிக்காக, 3 சர்க்கரை
ஆலைகளுக்கு 38 கோடியே 13 லட்சம் ரூபாய் முன் பணமாக வழங்க முதலமைச்சர்
ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.இதில் NPKRR சர்க்கரை ஆலைக்கு 17 கோடியே
34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயும், திருத்தணி சர்க்கரை ஆலைக்கு 14 கோடியே 29
லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 6 கோடியே 48
லட்சத்து 47 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு இன்று விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள மாநில வேளாண்மை பயிற்சி
நிலையத்தில் இரண்டு ஆண்டு வேளாண்மை பட்டயப்படிப்பு இந்த ஆண்டு முதல்
தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு 20 நவீன
சேமிப்புக் கிடங்குகள் மற்றும் 20 குளிர்பதனக் கிடங்குகள் சுமார் 30 கோடியே
36 லட்ச ரூபாய் செலவில் அமைக்கவும் முதலமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.