குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு

    குரூப் – 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு வரும் 18ம் தேதி சென்னையில் தொடங்கும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை 7-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வை 12 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினர். மொத்தம் 10 ஆயிரத்து 718 பணியிடங்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றோருக்கான தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சியின் தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த கலந்தாய்வு மூலம் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான துறை ஒதுக்கீடு செய்யப்படும்.