வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் ஒபாமா

         மெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஒபாமா,   தனது சொந்த நகரமான சிகாகோவில் இருந்து  இன்று வெள்ளை மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
சிசாகோவிலிருந்து தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வெள்ளை மாளிகைக்கு  திரும்பிய ஒபாமாவிற்கு  வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.
தேர்தல் பிரசாரத்தின் போது தாம் குறிப்பிட்ட நடுத்தர மக்களுக்கான வரியை தத்து செய்தல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவது குறித்து உயர்மட்ட தலைவர்களுடன் ஒபாமா தொலைபேசியில் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.