டிச.15 முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின்உற்பத்தி – நாராயணசாமி

         கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த மாதம் 15ந் தேதி முதல் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதில் உற்பத்தியாகும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழகத்திற்கு 450 மெகாவாட் , கேரளாவிற்கு 130 மெகாவாட், கர்நாடகாவிற்கு 225 மெகாவாட் மற்றும் புதுச்சேரிக்கு 37 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இரண்டாவது அணுஉலையில் அடுத்த ஆண்டு மின்சார உற்பத்தி தொடங்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.
-இணைய செய்தியாளர் - வெங்கடேஷ்