2ஜி ஏலம் நடத்தப்பட்டதில் மோசடி : மத்திய அரசு மீது பாரதிய ஜனதா குற்றச்சாட்டு

        ண்மையில் நடைபெற்ற 2ஜி அலைக்கற்றைக்கான ஏலம், அதிக விலைபோகாததன் பின்னணியில், மத்திய அரசின் சதி இருந்திருக்கக் கூடும் என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்த கருத்தை பொய்யாக்கவும், அதன் மீது விசாரணை நடத்தவுமே இவ்வாறு நடந்திருக்கலாம் என அக்கட்சியின் மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார். தொலைத் தொடர்புத்துறையின் முக்கிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்காதது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார். எனவே, நடந்து முடிந்த ஏலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஜோஷி வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையானவரான மத்திய கணக்குத் தணிக்கையாளரை மத்திய அமைச்சர்களே வெளிப்படையாக விமர்சிப்பது கண்டனத்திற்குரியது என்ற ஜோஷி, இதற்காக அவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். 2ஜி குறித்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் கருத்தில் எவ்வித தவறும் இல்லை என்றும், தவறு மத்திய அரசிடம்தான் உள்ளது என்றும் ஜோஷி குற்றம் சாட்டினார்.