தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று ஓடாது

   தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, தனியார் பள்ளி வாகனங்கள் கட்டுப்பாடு சட்டத்தில், நடைமுறைப்படுத்த முடியாத வகையில் எட்டு விதிமுறைகள் உள்ளதாகவும், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பள்ளி வாகனங்கள் இன்று இயக்கப்படாது என்ற போதிலும், பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.