காஸாவில் 8-வது நாளாக தாக்குதல் : 100-க்கும் மேற்பட்டோர் பலி

     பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் 8-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினரும், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. வரும் வியாழக்கிழமைக்குள் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனில், தரைவழித் தாக்குதலைத் தொடங்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  அதே நேரத்தில், இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருவதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
இதனிடையே, பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இஸ்ரேலுக்கு செல்லவிருக்கிறார்.
-P.V.உமாதேவி