அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

        புதுக்கோட்டை அருகே அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் அனுமதியின்றி குளத்து மண்ணையும், பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சக்கைக் கற்களையும் பலர் அள்ளிச் செல்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி மண் மற்றும் கற்களை ஏற்றிச் சென்ற 7 டிராக்டர்கள், இரண்டு லாரிகள், மற்றும் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.