காவிரி நீர் வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

            காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து உடனடியாக 20 டிஎம்சி தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது, காவிரி நடுவர் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாத மத்திய அரசுக்க உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 31-ம் தேதிக்குள் மத்திய அரசு தமது முடிவை அறிவிக்கவும், வரும் 11-ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்டவும் உத்தரவிட்டுள்ளது.
இதுதவிர இரு மாநில நீர்பற்றாக்குறை குறித்து கண்காணிப்புக்குழு முடிவு எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு மத்திய அரசும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 -பசுமை நாயகன்