தெலங்கானா விவகாரம் : பிரதமருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு

      ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார்ரெட்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தெலங்கானா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
   மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேவையும் சந்தித்த கிரண்குமார் ரெட்டி மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறி்த்தும் சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாகவும் எடுத்துரைத்ததாக தெரிகிறது. தெலங்கானா விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
   தெலங்கானா விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா, அவரது அரசியல் ஆலோசகர் அகமது படேல் மற்றும் கடசியின் பொதுச்செயலர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை கிரண்குமார் ரெட்டி நேற்று சந்தி்த்து பேசினார்
                                                   -பசுமை நாயகன்